வவுனியாவில் கோரவிபத்து ஒருவர் பலி,ஒருவரது கைதுண்டிக்கபட்டது..!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றுகாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிசென்ற கூழர் ரக வாகனமும் கெக்கிராவையில் இருந்து மல்லாவிநோக்கி கதிர் அறுக்கும் இயந்திரத்தை ஏற்றிசென்ற உழவியந்திரமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த உழவியந்திரம் ஏ9 வீதியில் புளியங்குளத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்க்கருகாமையில் தரித்துநின்ற சமயத்தில் கொழும்பில் இருந்து வந்த கூழர் ரக வாகனம் மோதியதியேலே குறித்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. விபத்தில் கூழர் வாகனத்தில் பயணம் செய்த யாழ்பாணம் வடமாராட்சியை சேர்ந்த மரியதாஸ் நிறோசன் மரணமடைந்துள்ளதுடன், செ.அயந்தனின் கை ஒன்று துண்டிக்க பட்டுள்ளது.

உழவியந்திரத்தில் இருந்த சிந்துயன் என்ற இளைஞர் படுகாயமடைந்ததுடன் மற்றொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.