முல்லையில் வசமாக மாட்டிய ஆட்டுக்கள்ளன்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வந்த ஆடுகளில் ஜந்து ஆடுகள் திருடு போயுள்ளதாக ஆட்டு உரிமையாளர் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து தெரியவருகையில் கடந்த 08.10.18 அன்று இரவு வீட்டின் பட்டியில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆடுகள் களவாடப்பட்டுள்ள. இது குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இன்னிலையில் செம்மலை நாயாறுபகுதியில் கல்முனையினை சேர்ந்த ஆட்டு வியாபாரி ஒருவருக்கு ஆடுகள் விற்கமுற்பட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளார்கள். இவரால் களவாடப்பட்ட இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் கைது செய்யப்பட்ட நபரை 09.10.18 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 18.10.18 அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடுகள் களவு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப்பிரிவு பொலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.