வெளியானது சர்கார் டீசர்! வீடியோ உள்ளே!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் 6 மணிக்கு வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் சர்கார் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. முருகதாஸ்-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஏற்கனவே விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்கார் படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், சர்கார் பற்றிய புதிய தகவல்கள் தினம்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே விஜய் நடிப்பில் மெர்சல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த ”ஆளப்போறான் தமிழன்” பாடல் பெரியளவில் வைரலானது. அதுபோல சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடல் மாபெரும் அளவில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே #SarkarTeaserDay ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் சர்கார் டீசர் தற்போது வைரலாகி வருகிறது.