“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்

காதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மன்னார் தாழ்வுபாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் வெள்ளிக் கிழமை இரவு (19.10.2018) இடம்பெற்றுள்ளது.

மேலும், மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபன் வின்னி யோசப் (வயது 21) என்பவரே காதலுக்காக இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இளைஞன் சம்பவ தினத்தன்று, வழமைபோன்று சாப்பிட்டுவிட்டு, இரவு ஒன்பது மணியளவில் அவரின் அறைக்குள் படுக்கைக்கு சென்றிருந்தார்.

பின்னர், மறுநாள் காலை பெற்றோர் அவரின் அறையை சென்று பார்த்த போதே இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்தது முழுமையாகத் தெரியாதபோதும், இவர் தனது காதல் சம்பவமாக தொலைபேசியில் உரையாடுவது எங்களுக்குத் தெரியும் எனவும், காதலில் இருவருக்கும் ஏதாவது முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் என தாங்கள் நம்புவதாகவும் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதற்கு சான்றாக, இறந்த இளைஞன் காதலின் விரக்தியாலேயே தான் மரணத்தை தழுவிக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டே இவ் முடிவை மேற்கொண்டுள்ளார் என மரண விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.