50 பயணிகளுடன் சென்ற அரச பேருந்து விபத்து! 7 பேர் பலி!

image_pdfimage_print

இந்தியாவின் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் அரச பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

பார்பேட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் நல்பாரி மாவட்டத்தின் குளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 20 க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளத்தில் மூழ்கிய மேலும் சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.