கட்டுநாயக்கவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காத்திருந்த அதிர்ச்சி!

ஒருதொகை சிகரெட் பெட்டிகளை சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிற்கு கொண்டு வந்துள்ள இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பெட்டிகளைக் கொண்டுவந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இன்று காலை ஏழு மணியளவில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகிகள் இருவரும் டுபாய் நாட்டிலிருந்து வந்தவர்களென பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.