விசா பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்!

தற்போது நாட்டில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்கள் யுவதிகளிடம் பணம் மோசடி செய்வதற்கு என்றே ஒரு கும்பல் இருக்கின்றது.

அந்தவகையில் குறித்த கும்பல்களை கைது செய்தும் மறை முகமாக செயற்படும் கும்பல்களை தேடியும் பொலிஸார் இன்றும் பல சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இத்தாலிக்கு பயணிப்பதற்கு விசா பெற்றுத்தருவதாக தெரிவித்து இளைஞர்களை திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட யுவதியொருவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹவௌ – தொடுவாவ பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே யுவதியொருவரும் இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.