நாம இன்னும் என்னென்ன அவலங்களை எல்லாம் பார்க்கணுமோ தெரியல. முல்லைத்தீவு பாண்டியன் குளத்தினை சேர்ந்த சிறுமி ஒருவர் சுகயீனம் உற்ற நிலையில் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி போகும் வழியிலே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. வைத்தியசாலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இந்த 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த செய்தி மருத்துவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.