முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் 22.10.2018 இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இணைத்தலைவர்களான மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா குணசீலன் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் ஜனோபர் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் வீட்டுத்திட்டம் மற்றும் காணி அபகரிப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.