முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 68 ஆவது படைப்பிரிவின் 2 ஆவது படைமுகாம் அமைந்துள்ள மக்களுக்கு சொந்தமான காணி இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றது.
அதற்காக படைத்தரப்பிற்கு 59 மில்லியன் பணம் தேவை என்பதை படையினர் மாவட்ட செயலத்தில் தெரிவித்துள்ளார்கள்.
ஜனாதிபதியிடம் இருந்து அந்த பணம் கிடைத்தவுடன் மிகவிரைவில் அந்த இடம்விடுவிக்கப்படும் என்று இராணுவத்தளபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதே வேளை புதுக்குடியிருப்பு சந்தியில் அமைந்துள்ள படைப்பொலீசார் நிலைகொண்டுள்ள காணி அபிவிருத்திக்காக உடனடியாக விடுவிக்கப்படவுள்ளதாகவும் படைத்தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளார்.