முல்லைத்தீவில் 12 வயது சிறுமியை தாய்மையாக்கியவர் கைது!

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் 12 வயது சிறுமியொருவரைத் தாயாக்கிய இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

12 வயதான சிறுமி நேற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார். சிறுமியின் தாய் வழி உறவினர் ஒருவரே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.