வவுனியாவில் பேருந்துடன் சிக்கிக் கொண்ட பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள்!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குருமன்காட்டு சந்திக்கு அருகே திடீரென வீதிக்கு ஏற முற்பட்ட மோட்டார் சைக்கிள், வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.