சற்றுமுன்னர் திருமுறுகண்டிப் பகுதியில் ரத்னாரவல்ஸ் பேரூந்து விபத்து!

சற்றுமுன்னர் திருமுறுகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேரூந்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார்சைக்கிள் பிரதான வீதியை கடக்க முற்பட்ட சந்தர்பத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரத்னாரவல்ஸ் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. மோட்டார்சைக்கிள் சாரதியின் கவனயீனமே குறித்த சம்பவத்துக்கு காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைநியூஸ் செய்திகளுக்காக- ப.சரண்ராஜ்