பாடசாலையில் அதிபரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவர்கள்!

இலங்கை பியகம கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையின் அதிபர் அப்பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ததாக சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அதிபரால் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுவர்கள் சிலர் தமது பெற்றோர்களுடன் சென்று கடந்த 22ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.துஸ்பிரயோகத்திற்குள்ளான இரண்டு சிறுவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிபரால் பாடசாலை நேரத்தில் சில பாடசாலை மாணவர்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சபுகஸ்கந்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது