புதிய கட்சி ஆரம்பிக்க இதுதான் காரணம்; சி.வி.விக்னேஸ்வரன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விசுவாசமாக செயற்பட்டிருந்தால், தான் ஓய்வு பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக இன்று அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வைத்து தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க உள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தான் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான காரணத்தையும் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தம்மை ஓர் அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய நிலையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே ஏற்படுத்தியுள்ளனர்” என கூறியுள்ளார்.