முல்லைத்தீவு-முள்ளியவளை மக்களை நிற்கதியாக்கிய பிரதேச சபை செயலாளர்!

முள்ளியவளை ஜயனார் குடியிருப்பு மற்றும் கேப்பாபுலவு பகுதிகளில் மக்கள் குடிநீருக்கு பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஜயனார் குடியிருப்பு மற்றும் கேப்பாபுலவு புகுதிகளில் நீர்தாங்கி வைத்து மக்களுக்கான குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்தது.

இந் நிலையில் 23.10.18 அன்று குறித்த ஜயனார் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்ட இரண்டு நீர்த்தாங்கிகளும் மற்றும் கேப்பாபுலவு பகுதியில் வைக்கப்பட்ட இரண்டு நீர்தாங்கிகளும் பிரதேச சபையினரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினர் வட்டார உறுப்பினர்களுக்கு எதுவித அறிவிப்பும் இன்றி குறித்த இரண்டு பகுதிகளிலும் இருந்து நீர்தாங்கிகளை எடுத்து சென்றுள்ளார்கள் பிரதேச சபை செயலாளரின் தனிப்பட்ட நடவடிக்கையாக இது அமைந்துள்ளது என்றும் தற்போது மழை பெய்துள்ளது ஆனால் கிணறுகளில் நீர்மாட்டம் வரவில்லை பிரதேச சபையின் இவ்வாறான நடவடிக்கையினால் மக்கள் குடிநீரினை பெற்றுக்கொள்ள சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.