இலங்கையின் புதிய பிரதமராக பதவி ஏற்றார் மகிந்த ராஜபக்சே படங்கள் உள்ளே!

இலங்கையின் ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ள சம்பவம் இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரம சிங்கே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையின் 11வது பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். அதிபர் சிறிசேன முன்னிலையில் இலங்கை அதிபர் செயலகத்தில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

2005 லிருந்து 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் அதிபராக பதவி வகித்து வந்தவர் மகிந்த ராஜபக்சே. அக்டோபர் 7ம் தேதியன்று அதிபர் மைத்ரிபால சிறிசேன ராஜபக்சேவை சந்தித்து பேசியதை அடுத்து இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது குறிப்பிடதக்கது.