கொழும்பின் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது! உச்சக்கட்ட பாதுகாப்பு அமுல்!

இலங்கை அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து அரச ஊடகங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவசர உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்று சில மணி நேரங்களில் சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்துக்கு சென்ற கும்பல் ஒன்று அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளது.

அதே சமயம் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ள பிரதேசங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவு ஒன்றை பாதுகாப்பு தரப்புக்கு பிறப்பித்துள்ளார்.

அதே சமயம் , அலறி மாளிகையில் ஐ தே க வினர் ஒன்று கூடி அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றம் தொடர்பான செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்…