செல்பி மோகத்தால் பரிதாபமாக பலியான பல்கலைக்கழக இளைஞன்!

image_pdfimage_print

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சென்ற இளைஞன் ஒருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி – பம்பலப்பிட்டிக்கு இடையிலான ரயில் வீதியில் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பங்களாதேக்ஷை சேர்ந்த 25 வயதான அப்சால் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு, ரயில் வீதியில் செல்பி எடுக்க முயற்சித்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவன் எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.