தனது மாமனாரினால் தாக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஒருவன் முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படிக்கவில்லை என்ற காரணதிற்காகவே மாமனார் வயரினால் தாக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீரிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி கினுஜன் (06) என்ற சிறுவனே பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் மாமனாரின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வீட்டில் கல்வி கற்கவில்லை என்ற காரணத்தினாலேயே மாமனார் வயரினால் தாக்கியுள்ளார். சிறுவன் பலமான காயங்களுக்கு உள்ளாகிய நிலை சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிசார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.