நடிகர் விக்ராந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு விஜய்சேதுபதி வசனங்கள் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஒரு படம் ரிலீசாகும் அளவிற்கு பிசியாக உள்ள நடிகர் விஜய்சேதுபதி, சக நடிகரான விக்ராந்துக்காக வசனகர்த்தாவாக மாறியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் போன்ற படங்களில் நடித்து வரும் விக்ராந்த், தனது சகோதரர் சஞ்சீவ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் கதையை கேட்ட விஜய்சேதுபதி, இப்படத்திற்கு தான் வசனம் எழுதட்டுமா எனக் கேட்டுள்ளார்.
சந்தோஷத்தில் உறைந்த இயக்குநர் சஞ்சீவ், உடனே ஒகே சொல்ல, இரவு நேரங்களில் முழு படத்திற்கும் விஜய்சேதுபதி வசனம் எழுதிக் கொடுத்துள்ளது எங்களுக்கு கிடைத்த வரம் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக விஜய்சேதுபதி தயாரித்து நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியிருந்த நிலையில், விக்ராந்துக்கு இந்த உதவியை செய்துள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான கவண் படத்தில் விஜய்சேதுபதி, விக்ராந்த் இணைந்து நடித்திருந்தது அனைவரும் அறிந்த விசயமே!