45 இலட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரஜைகள் கைது!

350 கிரேம் நிறையுடைய 35 ஹெரோயின் போதை மாத்திரை விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இரு வெளிநாட்டுப் பிரஜைகளை கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு பொலிஸார், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதை மாத்திரைகளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா எனவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.