கொழும்பு, விஜேராமவில் மகிந்த வீட்டை சுற்றிவளைத்த மக்கள்!

image_pdfimage_print

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து கொழும்பு, விஜேராமவில் இருக்கும் அவரது வீட்டை சுற்றி மக்கள் அதிகளவில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்தவின் வெற்றியை கொண்டாடுவதற்கே அவரின் ஆதரவாளர்கள் வீட்டை சுற்றிவலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வெற்றியை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் கொழும்பு ஆதரவாளர்களும் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றத்தை அடுத்து, கொழும்பின் சில பகுதிகளில் சற்று அமைதியின்மை தோன்றியுள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இன்று (27) அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.