மலை­யக மக்­க­ளுக்கு ஆத­ர­வாக -முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்­டம்!!

image_pdfimage_print

முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியினை சேர்ந்த குறுஞ்சி மக்கள் முன்னேற்ற கழகம் மலையக மக்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

27.10.18 அன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான பேரணியில் குறுஞ்சி மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த தொண்டர்கள் பலர் கலந்துகொண்டுடமை குறிப்பிடதக்கது.

இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சி.சுதர்சன், ஆ.ஜோன்சன்,திரு.சுகந்தினி. ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்.

புதிதாக வரவுள்ள அரசிடமும் மலைய மக்களின் அடிப்படை சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பிலான அறிக்கை ஒன்றினை நேரடியாக சென்று கையளிக்கவுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தெரிவித்துள்ளார்.