முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த விராங்கனை விதுஷா!

கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம் தோறும் நடாத்திவரும், தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 25.10.2018 அன்று மாத்தறை கொட்டவிலவில் அமைந்துள்ள மாத்தறை மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இந்த நிகழ்வின் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச சம்மேளனத்திற்கு உட்பட்ட பண்டாரவன்னியன் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த செல்வி சிவசோதிநாதன் விதுஷா

5000M ஓட்டப் போட்டியில் 2ம் இடத்தையும் 1500 M ஓட்டப் போட்டியில் 2ம் இடத்தையும் பெற்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.