மைத்திரி கொடுத்த கட்டளை; இராணுவம் முழு இலங்கையிலும் தயார் நிலையில்!

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, மைத்திரிபால இலங்கை ராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளார் என அறியப்படுகிறது. நாடு முழுவதிலும் ராணுவத்தை தயார் நிலையில் இருக்குமாறு அவர் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. இதேவேளை பாராளுமன்றத்தை உடனே கூட்டுமாறு ரணில் அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து, அவரை பதவி விலக வைக்க ரணில் முனைகிறார். ஆனால் மறு முனையில் மகிந்த தரப்பு காசை வாரி இறைத்து ரணில் பக்கம் உள்ள பல MPக்களை விலைக்கு வாங்க உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதேவேளை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, இலங்கை பாராளுமன்றத்தை கூடவிடாமல் மைத்திரியால் தடுக்க முடியும். இவ்வாறு பாராளுமன்றத்தை கூட்டாமல், முதலில் தனக்கு சாதகமான சூழ் நிலையை தோன்றும் வரை இவ்வாறு இழுத்தடிக்க முடியும். முழு அளவில் கோத்தபாய, ரிஷட், பிள்ளையான், மேலும் பலர் களத்தில் இறங்கி மைத்திரி- மகிந்தவுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துள்ளார்கள்.