ரணிலின் பதவி நீக்கத்தை கடிதம் மூலம் உறுதிப்படுத்தினார் மைத்திரி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உத்தியோகபூர்வமாக பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் மூலம் உறுதி செய்துள்ளார்.

தனக்கு இருக்கும் விசேட அதிகாரம் மூலம் அவரை பதவி நீக்கியுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தால் கடிதத்தை பிரதமர் ரணிலுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இன்று இரவு பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஜனாதிபதி மேற்படி அறிவித்தலை பிரதமர் ரணிலுக்கு அறிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலை தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதுடன் கட்சி தாவல்களும் இடம்பெறுமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.