சிறுபான்மை கட்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கூட்டாக அழைப்பு

புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு சிறுபான்மை கட்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.க, ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிற்கே இரண்டு தரப்பிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு நாடாளுமன்றத்தில் 96 ஆசனங்களும், ஐக்கிய கட்சிக்கு 105 ஆசனங்களும் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஒரு தொகை உறுப்பினர்களை இழுத்தெடுக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாகவே இந்த அழைப்பு அமைந்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அவசர கலந்துரையாடல் தற்போது நடைபெற்று வருகிறது. சம்பள பிரச்சனையை காரணம் காட்டி, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிரடியான முடிவுகளை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதேவேளை, முஸ்லிம் கட்சிகளும், ஈ.பி.டி.பியும் அமைச்சு பதவியை ஏற்குமென எதிர்பார்க்கப்படுகிறது.