பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி வெலிகந்த பிரதேசத்தில் பேருந்து மற்றும் பாரவூர்த்தி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 27 காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 09 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
26 பேர் படுகாயமடைந்து வெலிகந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெலிகந்த தொடக்கம் பொலன்னறுவை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியும் , கொழும்பில் இருந்து திருக்கோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தும் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து வெலிகந்த காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.