இலங்கையில் குழப்பம்! ரணில் தான் பிரதமர்: சபாநாயகர் அறிவிப்பு!

image_pdfimage_print

ரணில் தான் நாட்டின் பிரதமர்; சபாநாயகர் அறிவிப்பு இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அங்கு யார் பிரதமர் என்ற குழப்பம் உருவாகி உள்ளது.  இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிப்பார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் கருஜெயசூர்யா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராஜபக்சே பதவி ஏற்பை ஏற்றுக் கொள்ள முடியாது சபாநாயகர் அதிரடியாக நிரூபணம் செய்ய வேண்டும். மேலும் ராஜபக்சே உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். அவருக்கு எத்தனை எம்பிக்கள் பலம் உள்ளது என்று நிரூபிக்க வேண்டும். ராஜபக்சே தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே அவரது பதவி ஏற்பை ஏற்றுக்கொள்ள முடியும்.

ராஜபக்சேவிற்கு பிரதமருக்கான அதிகாரம் அனைத்தும் வழங்கப்படுகிறது என்று அதிபர் சிறிசேனா கூறினார். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-விற்குத்தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்குத்தான் உள்ளது என்று சபாநாயகர் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே பெரிய குழப்பம் ராஜபக்சே இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளமை. இந்த நிலையில் சபாநாயகரின் புதிய அறிவிப்பால் மேலும் குழப்பம் நீடிக்கிறது. இலங்கையின் பிரதமர் யார் என்று பெரிய குழப்பம் தொடர்ந்தும் நீடிக்கிறது.