நாட்டு மக்களின் நன்மை கருதி பொருட்களின் விலையை குறைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்காரணமாக, சில உணவுப்பொருட்களின் விலைகளைக் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தேநீர் 5 ரூபாவினால் இன்றிலிருந்து குறைக்கப்படவுள்ளதாகவும், உணவுப் பொதி, கொத்து ரொட்டி என்பவற்றின் விலையும் 10 ரூபாவினால் குறைக்க சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தற்போது நாட்டில் நாம் எதிர்பார்த்த சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் முடிவு மற்றும் தற்போதைய பிரதமர் மீது எமக்கு பூரண நம்பிக்கையுள்ளதாலேயே இந்த விலைக் குறைப்பை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சு அதிகாரிகள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.