ஜனாதிபதியை கொலைசெய்வதன் சூழ்ச்சியின் பின்னணியில் ரணில்,சரத்பொன்சேகா கைது செய்யப்படவுள்ளனரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலைசெய்வதன் சூழ்ச்சியின் பின்னணியில் ரணில் மற்றும் சரத்பொன்சேகா உள்ளிட்டோர் தொடர்புபட்டிருப்பதன் பின்னணியிலேயே இந்தக் கைது இடம்பெறவுள்ளதாக அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி கொலை முயற்சியில் ரணில் மற்றும் சரத் பொன்சேக உள்ளிடவர்கள் உள்ளமை தெரியவந்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குனர் நாமல் குமார, நேற்றைய தினம் தனது வீட்டில் ஏற்பாடு செய்யபட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தன்னைக் கொலை செய்வதன் சதித் திடத்தில் சரத் பொன்சேகா உள்ளடங்கியிருப்பதாகக் கூறியுள்ள ஜனாதிபதி மற்றொரு மிக முக்கிய பிரபலமும் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரது பெயரைத் தற்போது கூறமுடியாது என்ற விடயத்தினை மைத்திரி கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.