பூங்காவிற்கு வருபவர்களை முகம் சுழிக்க வைக்கும் காதலர்களின் லீலைகள்!

image_pdfimage_print

விழுப்புரம் நகராட்சி பூங்காவில் காதலர்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யும் செயல்கள் குழந்தைகளுடன் பூங்காவிற்கு வருபவர்களை முகம் சுழிக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மற்றவர்கள் அருகில் உள்ளார்கள் என்பதையெல்லாம் மறந்து விட்டு காதலர்கள் என்ற பெயரில் ஒருவருக்கொருவர் வரிசையாக ஒட்டி ஒரசிக் கொண்டு செல்போனில் வெளியே சத்தம் கேட்கும் அளவிற்கு விழுப்புரம் நகராட்சி பூங்காவில் ஆபாச படம் பார்ப்பதாக நபர் ஒருவர் பதிவு செய்துள்ள காணொளி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

இதனால் பெற்றோர்கள் குழந்கைளை அழைத்துச் கொண்டு பூங்காவிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் மட்டுமல்லாத பெரியவர்கள் முதியவர்களை இவர்களின் இந்த செயல் முகம் சுழிக்க வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதே பூங்காவில் இளைஞர்கள் ஓவியங்களை வரைந்து அழகு படுத்தனார்கள் எனவும் தற்போது காதல் என்ற பெயரில் பூங்காவை அசிங்கப்படுத்துவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பூங்காவில் மட்டுமல்ல எல்லா பூங்காவிலும் காதலர்கள் என்ற பெயரில் இது போன்றவர்களின் அத்துமீறல்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது போன்று செய்பவர்கள் குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் கொடுக்கப்படும் என அறிவிப்பு வைத்தால் இந்த அசிங்கங்கள் குறையும் எனவும் ஒரு சிலர் கருத்து பதிவு செய்துள்ளனர்.

18 வயது அடைந்து விட்டால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சம்பந்தப்பட்டவர்கள் கூறலாம். அது மற்றவர்களுக்கு இடையூறை அசவ்கரியத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் பூங்கா என்பது பொது இடம் அங்கே இது போன்ற அசிங்கங்கள் நிகழ்ந்தால் அது மற்றவர்களை முகம் சுழிக்க வைக்ககும்.

100 கணக்கான ஆபாச இணையதளங்களை இந்திய அரசு முடக்கியுள்ளது. காரணம் யாரும் அவைகளை பார்க்கக் கூடாது என்பதற்காக அதை பார்த்து யாரும் வழிகெட்டு விடகக் கூடாது என்பதற்காக. அந்த அசிங்கங்களை காதல் என்ற பெயரில் பொது வெளியில் அரங்கேற்றுவது நல்லதல்ல.