முல்லை. புதுக்குடியிருப்பில் தீயில் எரிந்த குடும்பத்திற்கு செஞ்சிலுவை சங்கம் உதவி!

முல்லைத்தீவு 10ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு பகுதியில் எந்தவித உதவிகளும் இல்லாமல் 3 பெண்பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் பெண் தலைமைதுவ குடும்பத்தை சேர்ந்த (சுரேஸ்குமார் பிரேமிலா) என்பவரின் வீடு அண்மையில் தீயில் எரிந்துள்ளது.
இதனால் இவர்கள் தங்கி வாழ்வதற்கு அடிப்படை வீடு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் 27.10.18 அன்று இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு கிளையினரால் அவர்கள் தற்காலிகமாக வாழ்வதற்கான குடில் மற்றும் நிவாரண பொருட்கள் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு கிளை இவ்வுதவிகளை வழங்கியமை குறிப்பிடதக்கது.