லண்டன் தமிழர்கள் இலங்கை செல்ல தடை!

சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற அரசு அறிக்கையின் படி, இலங்கை நிலை தொடர்பாக பிரித்தானிய அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது. ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சி MP போல் ஸ்காலி அவர்கள், பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். இலங்கையில் ஸ்திரமான நிலை இல்லை. தற்போது மேலதிக சிக்கல் தோன்றியுள்ளது. இந்நிலையில் அந்த நாட்டில் என்ன வேண்டும் என்றாலும் நிகழலாம்.

எனவே இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணம் என்றால் மட்டுமே இலங்கைக்கு செல்லுங்கள். இல்லை என்றால் தற்போது உள்ள சூழ்நிலையில் அதனை தவிர்ப்பது நல்லது என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பல புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்தவர்களை அவர் குறிவைக்க கூடும் எனவும், தற்போது கோட்டபாய ராஜபக்ஷவை மீண்டும் பாதுகாப்பு செயலாளராக போட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போக கருணா, ரிஷாட் பதியூதீன், என்று பலர் கொழும்பில் நேற்று இரவே கூடி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். மேலும் அடுத்த வட மாகாண முதல்வராக டக்ளஸ் தேவானந்தாவை கொண்டுவரும் பெரும் முயற்சியில் மகிந்த இறங்கவுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தி சசிதரன் ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்துள்ளார். கஜேந்திர குமார் ஒரு தனிக் கட்சியை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் ஐயா விக்கி அவர்களும் கட்சியை ஆரம்பித்துள்ளதோடு ஒட்டு மொத்தமாக சுமார் 5 தமிழ் கட்சிகள் தற்போது உள்ளது.

அடுத்து நடக்கவுள்ள வடமாகாண சபை தேர்தலில், தமிழர்களின் வாக்குகள் 5 தாக உடைக்கப்பட உள்ளது. இன் நிலையில் டக்ளஸ் கட்சி மற்றும் மகிந்தரின் கட்சி, மேலும் சில இதர கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டு, வாக்குகளை தட்டிச் செல்லக் கூடும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.