பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்படடுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர். நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இந்நிலையில் இன்று (29) முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
5.50 PM – கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.