மைத்திரி மஹிந்த தலைமையிலான புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்! படங்கள் உள்ளே!

image_pdfimage_print

மைத்திரி மஹிந்த தலைமையிலான கூட்டணியின் புதிய அமைச்சரவை சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவிற்கும் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

 

இதன் பிரகாரம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட விஜயதாச ராஜபக்சவும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரான மஹிந்த ராஜபக்சவிற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும் வெளிவிவகார அமைச்சராக சரத் அமுனுகமவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தி மற்றும் மீள் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாம்பிட்டியவும், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக விஜித் விஜித்தமுனி சொய்சாவும், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக டக்ளஸ் தேவாநந்தாவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.