சற்றுமுன் திரண்டது ஜக்கிய தேசியக்கட்சி:கொழும்பு குழம்பியது!

தனது அரசியல் பலத்தை காட்ட ஜக்கிய தேசியக்கட்சி விடுத்துள்ள அழைப்பினையடுத்து இலட்சக்கணக்கில் திரண்டுள்ள கட்சி ஆதரவாளர்களால் கொழும்பின் இயல்பு வாழ்வு குழம்பியுள்ளது. மஹிந்த அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டிருந்த நிலையில் அதனை தாண்டி இன்றைய தினம் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கொழும்பில் திரண்டுள்ளனர்.

அவர்களின் திரட்சியால் கொழும்பின் பல இடங்களிலும் வீதிகள் மூடப்பட்டுள்ளன. ஜக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களது திரட்சியால் கொழும்பு ஆடிப்போயுள்ளது.

இதனிடையே மஹிந்தவுடனான சந்திப்பின் போது எதிர்கட்சி தலைவர் பதவி குறித்து எந்த பேச்சுக்களும் நடத்தப்படவில்லையென இரா.சம்பந்தர் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் கோரிக்கையின் பேரிலேயே சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.