மகிந்த-சம்பந்தன் சந்திப்பு..சந்தர்பத்தை சரியாக பயன்படுத்துவரா?சம்பந்தன்

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சற்றுமுன்னர் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைமைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என்று சம்பந்தனிடம் மஹிந்த தெரிவித்தார்.

“கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் எழுத்துமூலம் கோரிக்கை தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரிசீலித்து முடிவு எடுப்போம்” என்று இதன்போது சம்பந்தன் பதிலளித்துவிட்டு வெளியேறி வந்துவிட்டார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.