எரிபொருள் விலை தொடர்பாக பிரதமர் அளித்த உறுதிமொழி!

image_pdfimage_print

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று (புதன்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த விலைச்சூத்திரத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் பெறாது, அரசாங்கத்தின் வருவாயினை மேலும் ஈட்டி கொள்வதற்காகவே குறித்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் முறையற்ற விதத்தில் அரசாங்கம் அறவிடும் வரிகளுக்கு மேலும் வழு சேர்ப்பதாகவே இது அமைந்துள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிரணி கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.