ஜோசியம் பார்ப்பதாக கூறி பெண்களிடம் சித்து விளையாட்டு காட்டிய சாமியார்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிற ஓதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமியார் ஸ்ரீதர். அந்த பகுதியில் ஜோசியம் பாக்கறதுல ரொம்ப பிரபல்யம் ஆனவர் இதில் வெற்றி ஆனதும் அடுத்ததாக மாந்திரீகத்தை கையில் எடுத்து கொண்டார்.

வரும் பெண்களிடம் ஜோசியம் பார்க்கிறேன் என்று சொல்லி பெண்களை தவறாக பயன்படுத்தி கொள்கிறார் என்று இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் எழத் தொடங்கின. ஆனாலும் ஸ்ரீதரை நம்பி பெண்கள் கூட்டம் வந்து கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்பவர் ஸ்ரீதரிடம் ஜோசியம் பார்க்க சென்றுள்ளார்.

என்ன பிரசச்னை என்று ஸ்ரீதர் மல்லிகாவை கேட்டார் அதற்கு மல்லிகா தன் உடம்பில் எப்பவும் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கு எதனால இப்படின்னு தெரியல நீங்கதான் இதை சரி பண்ணனும் என்றார். உடனே ஸ்ரீதர் இப்படிப்பட்ட பிரச்சனைக்கு எல்லாம் ஜோசியத்தை விட மாந்தீரிகம்தான் சரியானது.

அதனால நான் சொல்லும் நாளில் என்னை வந்து பாரும்மா என்று சொல்லி நாளையும் குறித்து கொடுத்தார். அதன்படியே மல்லிகாவும் குறித்த அந்த நாளில் சென்றார் உடனே ஸ்ரீதர் மாந்திரீகம் செய்ய வேண்டும் என்றால் நிர்வாணமாக இருக்க வேண்டுமே என்று சொல்லி மல்லிகாவை பலாத்காரமே செய்து விட்டார்.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த மல்லிகா கதறி கொண்டே தன் குடும்பத்தினரிடம் சொல்ல ஆத்திரமடைந்த அவர்கள், சாமியார் மீது செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்க சென்றனர். அப்போது தான் மற்றொரு விவரம் தெரியவந்தது பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே சுமதி என்ற பெண்ணும் ஸ்ரீதர் பற்றி புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

2 புகார்கள் அடுத்தடுத்து வர போலீசார் இதனை உடனடியாக பதிவு செய்தனர். பின்னர் இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.