இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு! முழுவிபரம் உள்ளே!

image_pdfimage_print

எரிபொருளின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.அந்தவகையில், பெட்ரோலின் விலை 10 ரூபாயாலும், டீசலின் விலை 7 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டர் 155 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக குறைவடைகிறது. அத்துடன் டீசலின் விலை 123 ரூபாயிலிருந்து 116 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி கட்டணம் கிலோமீற்றருக்கு 5ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் குறைவடையுமா என மக்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொலைத்தொடர்பு வரி 25%இல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கான பசளை இன்று நள்ளிரவு முதல் மானியமுறையில் 500/- வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கான காசோலை கூப்பன் இரத்து, இனிமேல் சீருடை துணி பாடசாலையில் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.