ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய உறுப்பினர்களின் திடீர் மனமாற்றத்தால்; சோகத்தில் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆதரவு வழங்கி புதிய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை பெற எதிர்ப்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவர் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இவருடன் மேலும் சில ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மூவரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் மகிந்த ராஜபக்ஸவின் புதிய அமைச்சரவைக்கு ஆதரவு வழங்க உடன்பட்டுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.