செல்பி மோகத்தால் 800 அடி உயரத்திலிருந்து விழுந்த இளம் ஜோடி!

அமெரிக்காவின் கலிபோர்னியா , யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்த இந்திய இளம் என்ஜினீயர் தம்பதியர் விஷ்ணு விஸ்வநாத் மற்றும் மீனாட்சி மூர்த்தி 800 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து ‘செல்பி’ எடுத்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என , விஷ்ணு விஸ்வநாத்தின் சகோதரர் கூறி உள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் முக்காலியில் ஒரு கேமரா கேட்பாரற்று கிடப்பதாக அங்கு சென்ற பொதுமக்கள் கூறியுள்ளனர். அதன்பின்னரே குறித்த தம்பதியரின் உடல்களை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை அவர்கள் இருவரும் தவறி விழுந்து மரணம் நேரிடுவதற்கு முன்பாக டாப்ட் பாயிண்ட் என்ற இடத்தில் மற்றொரு தம்பதியர் எடுத்த ‘செல்பி’ படத்தில் மீனாட்சி மூர்த்தி தோன்றுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.