இன்றைய ராசிபலன் 02.11.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

image_pdfimage_print

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் வீண் செலவுகள் ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சமாளித்து விடுவீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்டகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகளின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் சமயோசிதமான யோசனை நிர்வாகத் தினரால் பாராட்டப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தா லும், தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செய்வீர்கள்.

வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருப்பது அவசியம். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தா லும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எதுவும் எடுப்பதைத் தவிர்க்கவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

இன்று எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் ஏற்படுத்துவதாக அமையும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும் திடீர் செலவுகளும் ஏற்படும்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை முக்கியமான விஷயத்தில் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். உடல் நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தருவதாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணமும் அதனால் பணவரவும் ஏற்படக்கூடும்.

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் பணிந்துபோவார்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது.

வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.