இலங்கையில் அடுக்குமாடி குடியிருப்பில் 3 இளைஞர்களுடன் கைது செய்யப்பட்ட பெண்!

அத்துருகிரிய அடுக்குமாடி குடியிருப்பில் 3 இளைஞர்களுடன் கைது செய்யப்பட்ட பெண்; அத்துருகிரியவில் உள்ள மிலேனியம் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பொன்றில் பாரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட மூவரும் பெண் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து டீ 56 ரக துப்பாக்கி ரவைகள் நாற்பத்து நான்கும், 5 வாள்களும் 200 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கி என்பனவற்றை கைப்பற்றும் நோக்கில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள் கைதான இல்லம் நீண்ட காலமாக பாரிய அளவிலான போதைப்பொருள் வியாபார தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது