இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவற்துறை பிரிவுக்குட்பட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று அதிகாலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த மீன் ஏற்றும் பட்டா ரக வாகனம் ஒன்று பிரதேச செயலகத்தின் முன்னாலுள்ள மின் கம்பத்தில் மோதியத்தில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தின் மேற் பகுதியும் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளது.

மின்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அருந்துள்ளதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பயணித்த சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்