பலமடைந்து வரும் மஹிந்த-மைத்திரி கூட்டணி! பீதியில் ரணில்!

image_pdfimage_print

சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவிற்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கட்சித் தாவியிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், தனியார் பாடசாலைகளை நடத்திவரும் முன்னணி வர்த்தகருமான மொஹான் லால் கேரு மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளதுடன், கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

சிறிலங்காவின் மைத்ரி – மஹிந்த இணைந்து அமைத்துள்ள புதிய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட அமைச்சர்கள் குழுவொன்றும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவியேற்றுக்கொண்டது.

இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்த்துடைய இரண்டு அமைச்சர்கள், ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆறு பிரதி அமைச்சர்கள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சர்கள் சிலர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்சமயம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. இதன்படி,

நீர்ப்பாசன, நீர்வளத்துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திஸாநாயக்க, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக தயாசிறி ஜெயசேகர, இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பியசேன கமகே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு- லக்ஸ்மன் செனவிரத்ன ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம். எல். ஏ. எம். ஹிஸ்ப்புல்லா, கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக மோகன் லால் கிரோ, மாகாண சபை, உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜயவிக்கிர, விவசாயத்துறை பிரதியமைச்சராக அங்கஜன் ராமநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறை பிரதி அமைச்சராக சரதி துஷ்மந்தவும்

 

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக மனுஷ நாணயக்கார, துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டிகம, வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சராக இந்திக பண்டாரநாயக்க, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக காதர் மஸ்தான்

இதனுடன் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.