மீண்டும் யாழில் படையினர் கெடுபிடி – ஆட்சி மாற்றத்தின் எதிரொலி…

image_pdfimage_print

நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் இலங்கை பொலிஸார் யாழில் தமது கெடுபிடியை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் யாழ். பல்கலைகழகத்தில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் யாழ்.பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நிதி பின்னணி பற்றி விசாரணைகள் தற்பொழுது படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் , அதன் ஊடாக மாணவர்களுக்கு பெருந்தொகை பணம் கிடைக்க பெற்று உள்ளதாவும் இதனால் நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பிலும், எவ்வளவு நிதியுதவி கிடைத்தது என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே வல்வெட்டித்துறையில் மாவீரர் தின நிகழ்வு ஏற்பாட்டாளர்களை அழைத்து பொலிஸார் எச்சிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .