மக்கள் அவதானம்- இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!

image_pdfimage_print

இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் போலி நாணயத் தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் வவுனியா தேக்கவத்தை பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற நபரிடம் போலி நாணயத்தாள்களை வழங்கி கஞ்சா பெற்றுக் கொள்ள வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது நான்கு பேர் வருகை தந்துள்ளதுடன், பொலிஸாரின் நடவடிக்கையின் போது மூன்று பேர் தப்பிச் சென்றுள்ளனர். புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலக்கத்தினையுடைய 94687245 ஜயாயிரம் நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சந்தேகநபரும் போலி நாணயத்தாள்களும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.